வவுனியா, குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்று இரவு 9.30 மணியளவில்  குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி  கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது-56) என்பவர் குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார். 

அச் சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.  வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதன் போது பணத்தினை மீளப்பெறச் சென்ற கனகராசா சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.