ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பள்ளிவாசல் ஒன்றினுள் புகுந்த தற்கொலை குண்டுதாரி, தனது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததாகத் தெரியவருகிறது.

காபூலின் ஷைதி பள்ளிவாசலின் உள்ளே சற்று முன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை முப்பது பேரின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், மேலும் பல சடலங்கள் பள்ளிவாசலின் உள்ளே இருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.