ஏறாவூர்,  சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு  நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற  பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய  பாடசாலயில் இருந்து  மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள்  ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு  முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும்  மாணவர்கள், ஆசிரியர்கள்,  பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.