பாகிஸ்தான் அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 3  போட்டிகளில் வெற்றிபெற்று 3-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இன்று 4 ஆவது ஒருநாள் போட்டி ஐக்கிய இராச்சியத்தின் சார்ஜாவில் இடம்பெறுகின்றது.

இரு அணிகளிலும் இன்று புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் உஷ்மான் கானும் இலங்கை அணியில் சதீர சமரவிக்கிரமவும் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.