குழந்தை பிறந்து, நடக்கத் தொடங்கியவுடன் அக்குழந்தை தன்னுடைய தந்தையின் முன்கையில் உள்ள biceps பகுதியில், தங்களுடைய பிஞ்சு கைகளைக் கொண்டு தொங்கி விளையாடுவதை ரசித்திருக்கிறோம். இன்றும் ஒரு சில ஆண்கள் அந்த biceps பகுதியின் பொலிவான தோற்றத்திற்காக திருமணத்திற்கு பின்னரும் விசேடமான பயிற்சிகளை செய்துக் கொண்டிருப்பர். விருந்து மற்றும் உறவினர்களின் இல்ல விழாக்களுக்கு செல்லும் போது இறுக்கமான டீசர்ட்டை அணிந்து தங்களின் biceps ன் வலிமையைக் காட்டத் தவறுவதில்லை. ஆனால் இந்த biceps இயல்பாக இருக்கவேண்டிய அளவைக் காட்டிலும் நன்றாக தெரியவேண்டும் என்று சில ஆண்கள் அதிகளவிலான உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் போது, அங்குள்ள தசைகளுக்கு காயம் ஏற்பட்டு, வலுவினை இழக்கத் தொடங்குகின்றன. ஒரு சிலருக்கு அப்பகுதியிலுள்ள தசைநார்கள் கிழிந்து வலியை உண்டாக்கிவிடும். இதனை biceps strain என்று குறிப்பிடுவார்கள்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தசைப்பகுதிகள், முன்பக்க தோள் மூட்டு இணையும் இடம், முழங்கை மூட்டின் பகுதி ஆகிய இடங்களில் வலி தோன்றும். இந்த வலி ஒரு சிலருக்கு அடிக்கடியோ அல்லது ஒரு வாரத்திற்கு மேலாகவோ நீடிக்கக்கூடும். அப்படியிருந்தால் அவர்கள் biceps strain என்ற பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

இவர்களுக்கு தற்போது cold compression therapy  என்ற சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது, இந்த சிகிச்சையின் மூலம் தசைநார்களில் இரத்த ஓட்டம் சீர் படுத்தப்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த சிகிச்சையின் போதான குளிர்ச்சி ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் biceps க்கான பயிற்சியை அளவாகவும் முன்னெச்சரிக்கையுடனும் மேற்கொள்ளவேண்டும்.

டொக்டர் செந்தில் குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்