‘ சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும்? இது தான் ‘வெங்கட் சுப்ரமணி மைக் டெஸ்ட்டிங் 1..2..3..’ படத்தின் கதை களம். படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும் போது சில பிரச்சனைகள் உருவாகும். அந்த பிரச்சனைகளின் பின்னணியும், அதற்கான தீர்வும் தான் இப்படத்தின் திரைக்கதை. படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ , மது குடிக்கும் காட்சியோ கிடையாது.’ என்றார் படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ரோஷன்.

அவர் தொடர்ந்து பேசும் போது, இப்படத்தில் ஹர்ஷிதா தன்வார் என்ற மும்பை மொடலிங் மங்கையை நாயகியாக அறிமுகம் செய்கிறோம். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கருணாஸ், இமான் அண்ணாச்சி, யார் கண்ணன், மாரிமுத்து, வம்சி கிருஷ்ணா, ஆர் என் ஆர் மனோகர், செவ்வாழை, அனு கிருஷ்ணா, ரிஷா என பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் முருகேஷ் பாரதி. இவர் இயக்குநர் ஹரியிடம் உதவியாளராக பணியாற்றியவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்’ என்றார்.

வித்தியாசமான டைட்டில், ரசிக்கக்கூடிய அரசியல் கதை, கொமடி நடிகர்களின் கூட்டணி, தமிழ்நாட்டு சேகுவேரா என்ற விளம்பரம் என கொமர்ஷல் அம்சங்கள் இருப்பதால் வெங்கடசுப்ரமணி மைக் டெஸ்ட்டிங் 1 2 3  எதிர்பார்ப்கை ஏற்படுத்தியிருக்கிறது. 

தகவல் : சென்னை அலுவலகம்