அம்பாறை அட்டாளைச்சேனை பாலமுனையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை அக்கரைப்பற்று நீதவான் நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரான 22 வயது இளைஞன் நேற்று முந்தினம் (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டில் கட்டட நிர்மான பணியில் ஈடுபட்ட அக்கரைப்பற்று இத்தியடியைச் சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.