இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.!

Published By: Robert

20 Oct, 2017 | 11:03 AM
image

ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். 

Image result for Virakesari

சம்­பள உயர்வு கோரிக்­கை­யினை முன்­வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணி­ப­கிஸ்­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில்  அவர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர­த­மரின் செய­லாளர் தலை­மையில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  

இதன்­போது   இம்­மாத சம்­ப­ளத்தில் உயர்வு  உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தா­கவும் அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு 19ஆம் திகதி  வழங்­கப்­படும்  எனவும் கூறப்­பட்ட நிலையில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் எவையும் வராத கார­ணத்­தினால் இவர்கள் மீண்டும் கால­வ­ரை­யின்­றிய பணிப்­ப­கிஸ்­க­ரிப்பில் ஈடு­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர். 

இது தொடர்பில் ரயில்வே நட­வ­டிக்­கைகள் மேற்­பார்வை சங்­கத்தின் ஏற்­பாட்­டாளர் லால் ஆரி­ய­ரத்ன  குறிப்­பி­டு­கையில், 

கடந்த மாதம் 20 ஆம் திகதி எமது தொழிற்­சங்­கங்கள் அனைத்தும் பிர­த­மரின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இதன் போது திறை­சேரி அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.  எமக்­கான சம்­பள உயர்வை இரண்டு கட்­டங்­களில் உள்­ள­டக்­கு­வ­தா­கவும் இன்­றைய தினத்தில்  அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்­தலை சகல தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் வழங்­கு­வ­தா­கவும் பிர­த­மரின் செய­லாளர் எமக்கு வாக்­கு­றுதி வழங்­கினார். 

இந்த சம்­பள உயர்வின் பிர­காரம் 300 ரூபாய் அள­வி­லான அதி­க­ரிப்பே ஏற்­படும், எம்.பி1, எம்.பி2 தர ஊழி­யர்­க­ளுக்கு ஊதிய உயர்வை வழங்­கு­மாறு, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க பணிப்­புரை விடுத்­தி­ருந்தார்.  எனவே ஒரு­மாத காலத்தில் அதனை நிறை­வு­செய்து தரு­வ­தாக இவர்கள் வாக்­கு­றிதி வழங்­கினர். ஆனால் உரிய அதி­கா­ரிகள் இது­வ­ரையில் அதற்­கான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. ஆகவே பிர­த­மரின்  செய­லா­ளரின் வாக்­கு­றுதி மீறப்­பட்­டுள்ள நிலையில் புகை­யி­ரத தொழிற்­சங்­கங்கள், புகை­யி­ரத நிலைய அதி­கா­ரிகள், அதி­பர்கள்  மற்றும் புகை­யி­ரத கட்­டுப்­பாட்­டா­ளர்கள் எமது சகல தொழிற்­சங்­கங்கள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து ஏக­ம­ன­தாக ஒரு தீர்­மா­னத்­தினை எடுத்­துள்ளோம். 

அதா­வது நாளை( இன்று ) 20 ஆம் திகதி நள்­ளி­ரவு தொடக்கம்  நாட­ளா­விய ரீதியில் கால­வ­ரை­ய­றை­யின்றி பணிப்­ப­கிஸ்­க­ரிப்பில் ஈடு­பட தீர்­மானம் எடுத்­துள்ளோம். நாம் நியா­ய­மாக எமது கோரிக்­கை­களை முன்­வைத்து அமை­தி­யாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட போதிலும் எமது பிரச்­சி­னை­களை அர­சாங்கம் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். எனவே மக்களை அசௌகரியப்படுத்தும் செயற்பாடாக  அமைந்தாலும் கூட எமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் மூலமாக காலத்தை கடத்தாது எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வரையில் நாம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04