வவுனியா, கனகராயன்குளம் பகுதியில்  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது, குறித்த வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த நான்கு நபர்களையும் எதிர்வரும் 23 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.