தமி­ழர்கள் குடி­கா­ரர்களென வர்­ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்­டனம்

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 01:09 PM
image

மட்­டக்­க­ளப்பில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யா ற்­றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமி­ழர்கள் அதிக பணத்தை மதுவுக்கா­க வும்,முஸ்­லிம்கள் அதிகபணத்தை கல்­விக்­கா­கவும் செலவ­ழிக்­கின்­றார்கள் என சனிக்­கி­ழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியை சுட்­டிக்காட்டி அமைச்சர் தமிழ் மக்­களிடம் இக் கூற்­றுக்­காக மன்­னிப்பு கோர வேண்டும் என தமிழ் ஈழவிடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) நிர்வாகச்செய­லாளர் நித்தி மாஸ்டர் தெரி­வித்தார்.

முஸ்லிம் கிரா­மங்­களை அண்­டிய தமிழ் பகு­தி­களில் இருக்கும் மது­பான சாலை­களில் இரவு 06 மணி­முதல் 08 மணி­வரை யார் அதிகம் சாராயம் வாங்­கு­கின்­றார்கள் என்­பதை பிரதி அமைச்சர் அமீர் அலி நின்று பார்த்­தி­ருந்தால் இக் கூற்றை அவர் மாறி கூறி­யி­ருக்க வேண்டும். குறிப்­பாக காரை­தீவு,  களு­வாஞ்­சிக்­குடி, ஆரை­யம்­பதி, செங்­க­லடி போன்ற பகு­தி­களில் இருக்கும் மது­பான சாலை­களில் விற்­பனை அமோ­க­மாக நடை பெறு­வது யா

ரால் என்­பது அமைச்­ச­ருக்கு தெரி­யாது என

நினைக்­கிறேன்.

தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் ஒரே சொத்து கல்வி. எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டாலும் தனது பிள்­ளை­க­ளுக்கு கல்­வியை ஊட்­டு­வதில் தமி­ழர்கள் பின் நிற்­ப­தில்லை. அதற்­காக அவர்கள் எவ்­வ­ளவு பணத்தை விட்­டெ­றிந்து செல­வ­ழிக்க தயாராக உள்­ளனர். தமி­ழர்கள் பிள்­ளை­களை இடை

நடுவில் வியா­பாரம் செய்ய அனுப்­பு­வ­தில்லை. 

எதற்கெடுத்­தாலும் அண்­மைக்­கா­லமாக தமிழ் மக்கள் கிள்ளுக் கீரைகள் என நினைத்து சில கிழக்கு அர­சியல் வாதிகள் எதை எதையோ எல்லாம் கூறும் அள­வுக்கு அவர்­களின் இனத்­து­வேஷம் அதி­க­ரித்­

துள்­ளது.

அண்­மையில் கூட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிப்லி பாறுக்  கல்­கு­டாவில் நடை பெற்ற நிகழ் வொன்­றிலே கிழக்கு மாகாண அதி­காரம் தமிழர் கைகளில் சென்று விட்டால் முஸ்லிம் மக்கள் தமி­ழர்­க­ளுக்கு அடி­மை­யாக இரு

க்க வேண்டும் என குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்கு ரெலோ தனது வன்­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்து இருந்­தது.

இன்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் பிர­தே­சத்தில் உள்ள கல்­கு­டாவில் மது­பான உற்­பத்தி நிலை­யமே அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதனை தடுத்து நிறுத்த முடி­யாத நிலையில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் உள்­ளார்கள்.

எனவே அமைச்சர் தெரிவித்த இக் கூற்றுக்கு கிழக்கு மாகாண தமிழர்களிடம் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47