ஹெரோயின் வர்த்­தகம் தொடர்பில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பிர­பல போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலேசுதாவின் இளைய சகோ­தரன் நேற்று வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தெஹி­வளை - கட­வத்த வீதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொரு­ளுடன் அவரைக் கைது செய்­த­தாக தெஹி­வளை பொலிஸார் தெரி­வித்­தனர். அவ­ரிடம் இருந்து 560 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் குறிப்பிட்டனர்.