அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­லமைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கின்றேன். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு கிடைக்கும். இந்த தீபா­வளி தினத்தை  மக்கள் மகிழ்ச்­சி­யுடன் கொண்­டா­டு­வதை போலவே அடுத்த தீபா­வ­ளியில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொண்டு பூரண சமா­தா­னத்­துடன் கொண்­டா­டு­வார்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன் என்று எதிர்க்­கட்சித் தலைவர்  இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். 

ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற  தீபா­வளி நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

சம்­பந்தன் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மா­கவே நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­பட வேண்டும். இந்த செயற்­பா­டு­களின் பிள­வு­ப­டாத நாட்­டினுள் அதி­கார  பகிர்வை  முன்­வைத்து சமா­தா­னத்தை உரு­வாக்க வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணி­களை குழப்­பு­வ­தற்கு இரண்டு தரப்­பிலும் சிலர் முயற்­சிக்­கின்­றார்கள். 

ஆனால்  அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­மைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கிறேன். புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு  கிடைக்கும். இந்த தீபா­வளி தினத்தை  மக்கள் மகிச்­சி­யுடன் கொண்­டா­டு­வதை போலவே அடுத்த தீபா­வ­ளியில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொண்டு பூரண சமா­தா­னத்­துடன் கொண்­டா­டு­வார்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன். 

இலங்­கையில் இது­வரை கால­மாக இருந்த அர­சி­ய­ல­மைப்­பு­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. 1932,1938,1947 ஆம் ஆண்­டு­க­ளிலும்   அதன் பின்­னரும் கூட திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தாச காலத்­திலும் அதற்கு பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் காலத்­திலும் , முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­திலும் பல்­வேறு திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. 

அர­சி­ய­ல­மைப்­பபில் மாற்­றங்­களை கொண்­டு­வர பல்­வேறு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆட்­சியில் அர­சி­ய­ல­மைப்பு திட்டம் ஒன்றை முன்­வைத்த போதும் அந்த ஆட்­சியில் மஹிந்த ராஜபக் ஷ, தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அங்கம் வகித்­தி­ருந்­தனர். எனினும் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் ஒன்று இடம்­பெ­ற­வில்லை. அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யிலும் சர்­வ­கட்சி குழு அமைத்து நட­வ­டிக்­கை­களை எடுத்­தனர். ஆனால் இன­வாத பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் அனைத்­தையும் தடுத்­தன. 

இதன் தொடர்ச்­சி­யாக தற்­பொ­ழுது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் காலத்­திலும் மீண்­டு­மொரு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக தேசிய பிரச்­சி­னைக்குத் தீர்­வொன்று கிடைக்க வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். இந்த முயற்­சி­க­ளுக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்க தயா­ராக உள்­ளனர். இன்று வரையில் நடை­மு­றையில் உள்ள அர­சியல் அமைப்பு பழை­மை­யான ஒன்­றாகும். ஆகவே புதிய பயணம் ஒன்­றினை உரு­வாக்க தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற வகையில் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று அவ­சி­ய­மா­கின்­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சகலருக்கும் சமத்துவம் ஏற்படுத்தப்படுவதுடன்  நாட்டில் செழுமை ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்த வருடம்  தீபாவளி கொண்டாடப்படும்போது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்ட சூழல்  இருக்க வேண்டும். அப்படியானதொரு சூழலிலேயே    தீபாவளியைக் கொண்டாடுவதற்கான உண்மையான அர்த்தம் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.