15 அரச நிறு­வ­னங்­களில் பல பில்­லியன் கணக்கில் ஊழல் : கோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 11:10 AM
image

நாட்டில் 15 அர­ச­து­றை ­நி­று­வ­னங்­களில் இடம்­பெற்ற ஊழல்கள், இழப்­புகள், மோச­டிகள் மற்றும் தவ­றான கையா­டல்கள் என்­ப­வற்­றுக்­கான சான்­று­களை உள்­ள­டக்­கிய நான் ­கா­வது கோப் குழு அறிக்கை சபையில் சமர்ப் ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அரச பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய பாரா­ளு­மன்­றக்­கு­ழுவின் (கோப்) அறிக்கை அக்­கு­ழு வின் தலை­வ­ரான மக்கள் விடு­தலை முன்­ன­ ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­து நெத்­தி­யினால் மேற்­படி அறிக்கை  சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

குறித்த அறிக்­கையை சமர்­பித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­து­நெத்தி உரை­யாற்­று­கையில், 

15அர­ச­து­றை­நி­று­வ­னங்­களில் நடை­பெற்ற ஊழல்கள், இழப்­புகள், மோச­டிகள் மற்றும் தவ­றான கையா­டல்கள்  இடம்­பெற்­றுள்­ள­மைக்­கான சான்­றுகள் உள்­ளன. இவை பல பில்­லி­யன்கள் வரைய செல்லும் நிலை­மையே உள்­ளது. 

2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2017 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­மாதம் 28 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் கோப் குழுவின் முன்­னி­லைக்கு அழைக்­கப்­பட்ட 15 நிறு­வ­னங்­களில் இனங்­கா­ணப்­பட்ட பிரச்­சி­னை­களை அறிக்கை உள்­ள­டக்­கி­யுள்­ளது. 

குறித்த அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள அனைத்து விசா­ர­ணை­க­ளுக்கும் கணக்­காய்­வாளர் நாயகம் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­காய்வு கேள்­வி­க­ளு­டாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஆதா­ரங்­களை கொண்­டி­ருக்­கின்­றது.  

இந்த அறிக்­கை­களில் வௌிப்­ப­டுத்­தப்­படும் விட­யங்­களை சீர் செய்­வ­தற்கு பிர­தம கணக்­கியல் அதி­கா­ரிகள் என்ற வகையில் அமைச்சின் செய­லா­ளர்கள் தீவி­ர­மாக கவ­னத்தில் எடுத்து செயற்­ப­ட­வேண்டும்.  அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை என்றால் இந்த அறிக்­கை­களை சமர்ப்­பிப்­பதில் எவ்­வித அர்த்­தமும் கிடை­யாது என்றார்.

இந்­நி­லையில் குறித்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்கள் வரு­மாறு, 

2015 ஆம் ஆண்டில் தேசி­ய­போக்­கு­வ­ரத்­து­ஆ­ணைக்­குழு மூன்று தரம் பயண இலக்­கு­ப­ல­கைகள் மற்றும் அவ­ச­ர­தொ­லை­பேசி இலக்­க­வி­பர ஸ்டிக்­கர்­க­ளை­அச்­சி­டு­வ­தற்கு 1705343 ரூபாவை செல­விட்­டி­ருக்­கின்­றது. முறை­யா­ன­கொள்­முதல் நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டா­ம­லேயே இந்­த­பணம் செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஜி.பி.எஸ். தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி மாகாண பஸ்­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கு கட்­ட­ட­மொன்றின் அங்­க­மொன்றை புது­பிப்­ப­தற்கு தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு 37 மில்­லியன் ரூபாவை செல­விட்­டுள்­ளது. இருப்­பினும் அத்­தொகை பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. 79 மில்­லியன் ரூபாவை செல­விட்டு 1,307 ஜி.பி.எஸ். கரு­விகள் பஸ்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள போதிலும், பஸ்­க­ளி­லுள்ள கரு­விகள் செயற்­ப­டு­வ­தில்லை.  போகு­வ­ரத்து ஆணைக்­குகு ஏற்­பாடு செய்த விழா­வொன்­றுக்­காக தேசிய 8009310 ரூபா­வையும் தொலைக்­காட்சி ஆவ­ணப்­ப­ட­மொன்­றிற்­காக 1891000 ரூபா­வையும் உரிய அனு­ம­தி­யின்றி செல­விட்­டுள்­ளது. கொழும்பு பஸ்­டியன் மாவத்தை, அநு­ரா­த­புரம், குரு­நாகல், நுவ­ரெ­லியா, கதிர்­காமம், ரன்ன மற்றும் புத்­தளம் ஆகிய இடங்­களில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான மற்றும் மாகாண ரீதி­யான பஸ் சேவைகள் கால அட்­ட­வ­ணை­களை காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு 7 இலத்­தி­ர­னியல் திரை­களை 2013 ஆம் ஆண்டில் தேசி­ய­போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு 62 மில்­லியன் ரூபா­செ­லவில் நிறு­வி­யி­ருந்த போதிலும், தற்­போது அந்த திரைகள் செயற்­பாட்டில் இல்லை. 

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 8 மில்­லியன் ரூபா என்ற தொகை­யை­வி­டவும் அதி­க­மாக சென்று 9.2 மில்­லியன் ரூபா செலவில் தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் ஒரு­வ­ருக்கு வாக­ன­மொன்று கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. 2014ஆம் ஆண்டில் இரு சந்­தர்ப்­பங்­களில் பாட­சாலை பைகளை விநி­யோ­கிப்­ப­தற்­காக 2669500ரூபா மற்றும் 1327500 ரூபா ஆகிய தொகை­களை உரிய அனு­ம­தி­யின்றி செல­விட்­டுள்­ளது 

இலங்கை வங்­கி­யினால் தனியார் ஹோட்­ட­லொன்­றுக்கு வழங்­கப்­பட்ட 100 மில்­லியன் ரூபா கட­னுக்­கான வட்­டியின் பகு­தி­யொன்­றாக 7382305ரூபாவை 2014 ஆம் ஆண்டில் சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை செலுத்­தி­யுள்­ளது.

சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான விடு­முறை விடு­தி­யொன்றின் 30 அறை­களை புதுப்­பிப்­ப­தற்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த 29195802ரூபாவில் 11089228 ரூபா என்ற தொகை­யா­னது எந்­த­வொரு பணியும் நிறை­வேற்­றப்­ப­டாமல் பெறப்­பட்­டுள்­ளது. எவ்­வி­த­மான அனு­ம­தி­யு­மின்றி கற்கள் விநி­யோ­கஸ்த்தர் ஒரு­வ­ருக்கு 10196000 ரூபா செலுத்­தப்­பட்­டுள்­ள­தோடு ஒழுங்­கு­வி­திகள் மதிக்­கப்­ப­டாமல் அதி­கா­ர­ச­பை­யினால் விநி­யோ­கஸ்த்­தர்­க­ளுக்கு 3226950 ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. 

நிர்­மாணப் பணி­களை ஐந்து வரு­டங்­களில் புர்த்தி செய்யும் உத்­தே­சத்­துடன் 4 ஆயிரம் அறைகள் மற்றும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுடன் கூடி­ய­வி­டு­முறை உல்­லாச விடு­தி­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு 5,521 மில்­லியன் ரூபா என்ற உத்­தேச மதிப்­பீட்டு செலவுத் தொகையில் கல்­பிட்டி ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சுற்­றுலா திட்டம் 2008ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­திலும் கூட,2014 ஆம் ஆண்­டு­டி­சம்­பர்­மாதம் 31 ஆம் திக­தி­வரை 88,797,590 ரூபா செல­வி­டப்­பட்­டுள்ள போதிலும் ஒரு அறை கூட நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

மத்­தள சர்­வ­தேச விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் 2,105,298,382 ரூபா, 2014 ஆம் ஆண்டில் 2,729,201,680 ரூபா, 2015ஆம் ஆண்டில் 3,099,230,580 ரூபா மற்றும் 2016ஆம் ஆண்டில் 1,546,931,328 ரூபா நிகர நட்­டத்தில் இயங்­கி­யுள்­ளது. 

மக்கள் வங்­கி­யினால் வாடிக்­கை­யாளர் ஒருவருக்கு கடனாக வழங்கப்பட்ட 260 மில்லியன் ரூபாதொகையானது 2011 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்ததொகையானது சம்பந்தப்பட்ட அந்த ஆண்டில் மக்கள் வங்கியினால் அறவிட முடியா கடன்களாகத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் 51 சதவீததொகையாக அமைந்துள்ளது. 

இலங்கை பெற்றோலிய ் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் ஹெட்ஜிங் ஒப்பந்தம் குறித்து நடத்தப்படட  விசாரணைகளின் பிரகாரம், அவ்வொப்பந்தத்தினால் ஏற்பட்ட நட்டம் 2016ஆம் ஆண்டு ஜனவரியில் 10.2பில்லியன் ரூபாவாக இருந்தது.  2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அத்தொகை 14.06 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34