“இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன்” - குமுறும் இளம் வீராங்கனை!

Published By: Devika

19 Oct, 2017 | 03:37 PM
image

ஹொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டீனின் பாலியல் வன்முறைகள் குறித்த சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. இந்த நிலையில், ஏனைய துறைகளில் பணியாற்றும் பெண்கள், தாம் முகங்கொடுத்த பாலியல் நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

‘மீடூ’ என்ற ஹேஷ்டேக் (#MeToo) மூலம் பல்வேறு பெண்களும் தாம் அனுபவித்த பாலியல் கொடுமைகளைப் பறைசாற்றி வருகின்றனர். அந்த வரிசையில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை மெக்கெய்லா மெரோனி (21) அதிரடி புகார் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

தமது அணியின் மருத்துவராகக் கடமையாற்றிய லெரி நஸார், தன்னை தனது பதின்மூன்று வயதில் இருந்து தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் - அத்துறையில் இருந்து அவர் வெளியேறிய கடந்த 2016ஆம் ஆண்டு வரை - தன்னைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

“எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்குமோ அப்போதெல்லாம் அவர் என்னை துஷ்பிரயோகித்தார். குறிப்பாக, நான் தங்கம் வென்ற இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது பலமுறை என்னை துஷ்பிரயோகித்தார். 

“2011ஆம் ஆண்டு பீஜிங்குக்குப் புறப்பட்டபோது, விமானத்தில் வைத்து எனக்கு தூக்க மாத்திரை கொடுத்தார். நான் கண் விழித்தபோது, அவரது ஹோட்டல் அறையில் தனியே இருந்தேன். உடலெங்கும் கடும் வலியும், வேதனையுமாக இருந்தது. செத்துவிடுவேன் என்றே அன்று எனக்குத் தோன்றியது.”

இவ்வாறு மெரோனி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தம்மைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக நாஸர் மீது 125 பெண்கள் புகாரளித்துள்ளனர். அத்துடன், மேலும் சில பல குற்றச்சாட்டுக்களின் - குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட - அடிப்படையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார் நாஸர்.

அவர் மீதான தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், மெரோனி இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டிருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35