கனடாவின் கியூபெக் பிராந்தியத்தில், அரச பணியாளர்களும், அரசிடம் சேவை பெற விரும்புவோரும் முகத்தை மறைக்காத வகையில் ஆடை அணிய வேண்டும் என்ற சட்டத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான பிரேரணை கியூபெக் பிராந்திய சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும், இச்சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அப்பிராந்தியத்தின் ஆளுனரின் சம்மதம் பெறப்பட வேண்டும்.

குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும் பட்சத்தில், அரச பணியாளர்களான முஸ்லிம் பெண்களும், அரச சேவை பெற விரும்பும் பெண்களும் முக்காடு அணிவதில் சிக்கல் ஏற்படும்.

“அரச சேவையில் தெளிவான தொடர்பாடல், அடையாளம் மற்றும் பாதுகாப்பு என்பன பேணப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டத்தை அமுல்படுத்த முயல்கிறோம்” என கியூபெக் பிராந்திய முதல்வர் பிலிப் கொய்லார்ட் தெரிவித்துள்ளார்.

இச்சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில், அரச சேவை வழங்குனர்களும், அரசிடம் சேவை பெற பொதுமக்களும் முக்காடு, தலைக்கவசம், முகமூடி போன்ற எந்தவொரு ‘தடை’யையும் தரித்திருக்க முடியாது எனத் தெரியவருகிறது.