பாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் வெளியுறவு செயலருக்கு வரவேற்பளித்ததுடன், இலங்கை - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விருத்திசெய்யவேண்டியதன் அவசியத்தினை இதன்போது தெரிவித்தார்.

 

இதன்போது, பாகிஸ்தான் வெளியுறவு செயலர் இருநாடுகளினதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பாகிஸ்தான் ஆர்வமாக இருப்பதாக எடுத்துரைத்தமை குறிப்பிடதக்கது.