பாடசாலை ஒன்றின் பெண் பிரதி அதிபர் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பியகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தொம்பை கிம்புல்வத்தை மகா வித்தியாலயத்திலேயே மேற்படி பெண் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். ஐம்பத்து நான்கு வயதுடைய இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அதிகாலை இரண்டு மணியளவில் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்டதையடுத்து கண்விழித்த அவரது கணவர், குளியலறைக்குச் சென்று பார்த்தார். அங்கே குறித்த பெண் தன் கையில் மன்னை கத்தியை வைத்தபடி, கழுத்தறுபட்ட நிலையில் இருந்ததைக் கண்டார்.

உடனே தன் மகனை அழைத்து அவரின் உதவியுடன் தன் மனைவியை பியகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். எனினும், அதீத இரத்த இழப்பால் பெண் பிரதி அதிபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து நீதவான் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.