அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டமொன்று அவசரமாக இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், அது தவிர சைட்டம் விவகாரத்தில் எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்தும் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆராய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.