கினிகத்தேனையில் கேரள கஞ்சா போதைப்பொருளை தம்முடன் வைத்திருந்த 7 பேரை  அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பின் போதே 75 ஆயிரம்  மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரதான கஞ்சா வினியோகஸ்தர் ஒருவர் உட்பட விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுபவர்களான எழு பேரை கைது செய்துள்ளனர்.

கினிகத்தேனை, பொல்பிட்டிய மற்றும் ரஞ்சுர பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்களை இன்று அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.