கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி

Published By: Priyatharshan

19 Oct, 2017 | 10:17 AM
image

டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் - 2017 இறுதிப் போட்டிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இம்மாதம் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் முதலாவது போட்டியை கடந்த 1999 ஆம் ஆண்டில் 198 அணிகளின் பங்களிப்புடன் நடத்தியிருந்தது. அன்று முதல் டி.எஸ்.ஐ. நிறுவனம், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இந்தப் போட்டித் தொடரை வருடாந்தம் ஏற்பாடு செய்து, அனுசரணை வழங்கி வருகிறது. 

நகர்ப்புற மற்றும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு, தேசிய அரங்கு ஒன்றைப் பெற்றுக்கொடுத்து, அவர்களது திறமைகளை வளர்க்கவும் கரப்பந்தாட்டம் தொடர்பான சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதுமே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வருட போட்டித் தொடரில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி - 15 மற்றும் 17 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்கள் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளது. 24 ஆம் திகதி 13 மற்றும் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்கள், 13, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் ஆகிய பிரிவுகளின் போட்டிகள் இடம்பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58