ட்ரயல் அட்பார் நீதி­மன்றை நிறுவி அர­சியல் கைதிகள் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணுங்கள்.!

Published By: Robert

19 Oct, 2017 | 11:08 AM
image

தேசிய மட்­டத்தில் அவ­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள   தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­கா­ரத்தை ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்றை நிறுவி    மூன்று மாத­கா­லத்தில் தீர்த்­து­வி­ட­வேண்டும். இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இவ்­வாறு நீடித்­துக்­கொண்­டி­ருப்­பது முறை­யல்ல என்று  கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  கெஹலி­ய ­ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். 

அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:-

அர­சியல் கைதிகள் விவ­காரம்   விரை­வாக  தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். யுத்­தத்தின் பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­களை எமது அர­சாங்கம் விடு­வித்­தது. அவ்­வாறு 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­களை  விடு­வித்த   எமது அர­சாங்கம் ஏன் 170 பேரை விடு­விக்­க­வில்லை என்­ப­தற்கு காரணம் இல்­லாமல் இல்லை.  

கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­வர்­களே இவ்­வாறு   தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­காமல் தொடர்ந்து   இருப்­பது முறை­யா­ன­தல்ல. எனவே  இவர்கள் தொடர்பில்  சட்­ட­ரீ­தி­யான ஒரு முடிவு  விரைவில் எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

குறிப்­பாக  தற்­போ­தைய இந்தப் பிரச்­சினை தேசியப் பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. எனவே  இது­தொ­டர்பில் விரைந்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதனால் தமிழ் அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்தில் ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்றை நிறுவி இந்தப் பிரச்­சி­னையை மூன்று மாத­கா­லத்தில் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம். இது­தொ­டர்பில் அர­சாங்கம்  ஆராயவேண்டியது   அவசியமாகும். 

 அதனை  தவிர்த்து இந்தப் பிரச்சினையை தொடர்ந்து  நீடித்துக்கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை என்பதை வலியுறுத்து கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31