ஸாஹிரா சுப்பர் 16 கால்பந்தாட்டப் போட்டி : கிண்ண, கோப்பை அரை இறுதிகள் இன்று

Published By: Priyatharshan

19 Oct, 2017 | 10:14 AM
image

ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்கள் சங்கம் 13 ஆவது தடவையாக நடத்தும் ஸாஹிரா சுப்பர் 16 கால்பந்தாட்டப் போட்டியின் பிரதான கிண்ணப் பிரிவில் விளையாடுவதற்கு ஹமீத் அல் ஹுசெய்னி, பம்பலப்பிட்டி இந்து, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர், மருதானை ஸாஹிரா ஆகிய அணிகள் ஒரு போட்டியில்தானும் தோல்வி அடையாமல் தகுதிபெற்றன.

நடப்பு சம்பியன் வெஸ்லி, லும்பிணி, புனித சூசையப்பர், மாரிஸ் ஸ்டெல்லா ஆகிய அணிகள் கோப்பைப் பிரிவில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

ஸாஹிரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டிகளின் முடிவுகளின் பிரகாரம் கிண்ணப் பிரிவுக்கான  ஓர் அரை இறுதிப் போட்டியில் ஹமீத் அல் ஹுசெய்னியும் இந்துவும் விளையாடவுள்ளன. மற்றைய அரை இறுதிப் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் அணியை ஸாஹிரா எதிர்த்தாடவுள்ளது.

கோப்பை பிரிவுக்கான ஓர் அரை இறுதியில் வெஸிலியும் லும்பிணியும் விளையாடவுள்ளதுடன் மற்றைய அரை இறுதியில் புனித சூசையப்பரும் மாரிஸ் ஸ்டெல்லாவும் மோதவுள்ளன. இப் போட்டிகள் யாவும் ஸாஹிரா மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் நடைபெறும்.

நேற்றைய போட்டி முடிவுகள்

இந்து 2 - லும்பிணி 0, புனித ஆசீர்வாதப்பர் 1 - புனித சூசையப்பர் 1, புனித பேதுருவானவர் 0 - புனித ஹென்றியரசர் 0, றோயல் 1 -லைசியம் 0.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20