ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்.!

Published By: Robert

19 Oct, 2017 | 09:45 AM
image

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Image result for ரயில்வே virakesari

பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை நள்­ளி­ரவு முதல்  ரயில்வே சார­திகள், பாது­கா­வ­லர்கள், நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிகள் மற்றும் கட்­டுப்­பாட்­டா­ளர்கள் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ளனர். 

கடந்த வாரம் தாம் முன்வைத்த கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு வழங்காததையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் குறித்த தொழிற்­சங்கம் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55