கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி வைரஸ் தற்போது அண்ட்ரொய்ட் அலைபேசிகளிலும் பரவி வருவதாக இணையதள அவசரகால பதிலீட்டுச் சேவைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அண்ட்ரொய்ட் அலைபேசி சாதனங்களைக் குறிவைத்துப் பரவும் இந்த வகை வைரஸ்கள், உலகின் பல பாகங்களிலும் பல பயனாளர்களின் அலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ள மேற்படி குழு, அலைபேசிப் பயனாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.