தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன.

பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகளே மேற்படி கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் - முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் - இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் எதுவித மாற்றங்களை ஏற்படுத்தும் தேவை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்றும் அஸ்கிரிய - மல்வத்தை பீடாதிபதிகள் இணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.