ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

தீவிர விசாரணைகளின் பின்  மோப்ப  நாய்கள் இருவரை அடையாளம் காட்டியத்தை அடுத்து இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்ணெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.