இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் முக்கியமான போட்டியில் யார் வெற்றிபெறப்போவதென ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள்கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. எனவே இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் 5 போட்டிகள்கொண்ட தொடரை 3-0 என தன்வசப்படுத்திவிடும் 

இருப்பினும் இப் போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணியின் தொடரை வசப்படுத்தும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரை தன்வசப்படுத்தலாம் என இலங்கை அணி முனைப்புடன் இப் போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுவதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் வெற்றி யாருக்கென. 

இரு அணிகளுக்கும் எதிரான 3 ஆவது போட்டி டுபாயில் பகலிரவுப் போட்டியாக இன்று இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.