கொலன்னாவை பகுதியில் இருந்து காணாமல்போயிருந்த 14 வயதுடைய சிறுமியும் இன்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தமிழ் சிறுமி ஆகிய மூவரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், மூன்று பெண்களில் இரு பெண்கள் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான  19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல்போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டடிருந்தனர்.

இந்நிலையில் குறித்த 14 வயதுடைய தமிழ் சிறுமி இன்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், குறித்த 3 பெண்களும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிப்பதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, 15 வயதுடைய பெண்ணின் ஆண் நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 14 மற்றும் 15 வயதுடைய இரு பெண்களும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

மர்மமானமுறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண் ; தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்