கண்டி நகரில் வீசா அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடிய நைஜீரிய பிரஜை ஒருவரை கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின்படி விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக கண்டிபொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.