இன்­றைய போட்­டியை வென்றே ஆக­வேண்டும் : அசங்க குரு­சிங்க

Published By: Priyatharshan

18 Oct, 2017 | 12:10 PM
image

இன்று நடை­பெ­ற­வுள்ள பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி கட்­டாயம் வெற்­றி­பெ­ற­வேண்டும். ஏற்­க­னவே இரண்டு போட்­டி­களில் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளதால் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் தோல்­வியைத் தழு­வினால் ஒருநாள் தொடரை இலங்கை அணி இழக்கும்.

பாகிஸ்தான் அணிக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் உபுல் தரங்­க­வுக்கு துணை­நின்று ஆட ஒரு­வரும் இல்­லாமல் போனது கவ­லை­ய­ளிக்­கி­றது.

30 ஓவர்­க­ளுக்குள் 7 விக்­கெட்­டுக்­களை இழந்த பின் ஒரு போட்­டியை வெற்­றி­கொள்­வது அவ்­வ­ளவு எளி­தல்ல என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகா­மை­யா­ளரும் முன்னாள் வீர­ரு­மான அசங்க குரு­சிங்க தெரி­வித்தார்.

இலங்கை–பாகிஸ்தான் அணிகள் மோதி­வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்­டா­வது போட்டி நேற்று முன்­தினம் அபு­தா­பியில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில்  முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 219 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.  இதை­ய­டுத்து 220 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்­குடன் இலங்கை அணி கள­மி­றங்­கி­யது. இலங்கை அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக நிரோஷன் திக்­வெல்­லவும், உபுல் தரங்­கவும் கள­மி­றங்­கினர். 

பாகிஸ்தான் அணி­யி­னரின் பந்­து­வீச்­சுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இலங்கை அணி 28.1 ஓவர்­களில் 93 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுக்­களை இழந்து திண­றி­யது. இருப்­பினும் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க நிலைத்­து ­நின்று ஆடினார். அவ­ருடன் ஜெஃப்ரி வண்­டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரி­வி­லி­ருந்து மீட்க போரா­டினார். ஆனாலும் இலங்கை அணியால் தோல்­வி­யி­லி­ருந்து மீள முடி­ய­வில்லை. சிறப்­பாக விளை­யா­டிய தரங்க சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போரா­டினார். இருப்­பினும் மற்ற வீரர்கள் சரி­யாக விளை­யா­டா­ததால் இலங்கை அணி 187 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டுக்க­ளையும் இழந்­தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓட்­ட­ங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. தரங்க 112 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்தார். 

இந்தப் போட்டி குறித்து அசங்க குரு­சிங்­க­விடம் கேட்­ட­போது, உபுல் தரங்க தனது பணியை சிறப்­பா­கவே செய்தார். இலங்கை அணியின் ஏனைய துடுப்­பாட்ட வீரர்கள் சரி­யாக ஆட­வில்லை. அகில தனஞ்­சய, ஜெப்­ரியை நாம் குற்றம் சொல்ல முடி­யாது. 30 ஓவர்­க­ளுக்குள் 7 விக்­கெட்­டுக்­களை இழந்த பின்னர் ஒரு போட்­டியில் வெற்­றி­பெ­று­வது இல­கு­வா­ன­தல்ல. நாம் இப்­போது இரண்டு போட்­டிகளில் தோற்­று­விட்டோம். அதனால் மூன்­றாவது போட்­டியில் நிச்­சயம் வெற்­றி­பெ­ற­வேண்டும். வேறு எமக்கு வாய்ப்பு இல்லை என்றார். அணியில் ஏதும் மாற்றம் செய்­யப்­ப­டுமா என்று கேட்­ட­தற்கு, இப்­போ­தைக்கு சொல்ல முடி­யாது ஆனால் ஏதா­வது மாற்றம் வரலாம் என்று நான் எதிர்­பார்க்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35