கடந்த இரண்டு மாதங்­களில், வடக்கில் கடற்­ப­டையின் நட­வ­டிக்­கைகள் பத்து மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக,  கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னையா தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

“கடற்­படைத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், கடந்த இரண்டு மாதங்­களில் வடக்கில் கடற்­ப­டையின் நிலைப்­ப­டுத்தல் முறைகள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. கடற்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கைகள் அங்கு பத்து மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஏனைய பகு­தி­களில் இருந்து எமது பட­கு­களை, எடுத்து, எல்­லையில் குவித்­துள்ளோம். வடக்கில் பயன்­ப­டுத்­தப்­படும் பட­கு­களின் வகை­க­ளிலும் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதி­வேகத் தாக்­குதல் பட­கு­க­ளுக்குப் பதி­லாக,  அதி­வேகப் பீரங்கிப் பட­கு­களை நிறுத்­தி­யுள்ளோம்.

இவை பெரிய, மற்றும் கன­மான அடித்­த­ளங்­களைக் கொண்­டவை. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே வடி­வ­மைக்­கப்­பட்­ட­வை­யாகும்.  எமது நட­வ­டிக்­கைகள் முன்­

னரைப் போல இர­க­சி­ய­மா­ன­வை­யாக இல்லை. வெளிப்­ப­டைத்­தன்­மையும், பார்க்

கக் கூடி­ய­தா­கவும் உள்­ளன.

முன்­னைய முறைமை தவ­றா­னது. போரின் போது வேண்­டு­மானால் இர­க­சிய முறை­களைக் கடைப்­பி­டிக்­கலாம். போருக்குப் பின்னர் அவை அவ­சி­ய­மற்­றவை.நாங்கள் நாட்டின்  கடல் எல்­லையில் இருக்­கிறோம். சர்­வ­தேச கடல் எல்­லையைப் பாது­காக்கும் எம்மை யாரும் அவ­தா­னிக்க வேண்டும்.

இந்­திய மீன­வர்கள் எமது கடற்­ப­ரப்­புக்குள் வரு­வதை தடுப்­ப­தற்­கான அணு­கு­மு­றையில் இது ஒரு பெரிய வித்­தி­யா­ச­மாகும்.  .கைது செய்து துன்­பு­றுத்தும் முறைக்குப் பதி­லாக, எச்­ச­ரித்து தடுக்கும் முறையை பயன்­ப­டுத்தும் முறைக்கு மாறி­யி­ருக்­கின்றோம்.  

இலங்கை   கடற்­படை தனது உபா­யத்தை மாற்­றி­யதை அடுத்து தமிழ்­நாட்டு மீன­வர்கள் எமது கடல் எல்லைக்குள் வருவதை குறைத்துக் கொண்டு கேரள, ஆந்திர கடல் பகுதியை நோக்கிச் செல்கின்றனர்.

இது எமது திட்டம் 100 வீதம் வெற்றியடைந்துள்ளதைக் காட்டுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.