என் மீது போலி­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­ய­வுள்ளேன் என்று  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர சபையில் தெரி­வித்தார். நாமல் உள்­ளிட்­டோ­ருக்கு பிணை வழங்க வேண்டாம் என பாரா­ளு­மன்ற கூட்­ட­மைப்பின் பிர­தா­னியே கடிதம் அனுப்­பி­யுள்ளார்.

எனினும் அந்த கடி­தத்தில் கூட்­ட­மைப்பு என்­ப­தனை அடிப்­ப­டை­யாக கொண்டு என்­மீது குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­வது முற்­றிலும் அடிப்படையற்றது என்றும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை இலத்­தி­ர­னியல் திருத்த சட்­ட­மூ­லத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், மத்­தள தொடர்­பாக பல இடங்­களில் பேசப்­ப­டு­கின்­றது. பொய்­யான செய்­திகள் மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. எனினும்  மத்­தள விமான நிலையத்தை விற்­ப­தற்கு எந்­த­வொரு தீர்­மா­னமும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை. குத்­த­கைக்கே வழங்­க­வுள்ளோம். 

எனினும் அதற்கும் எந்­த­வொரு தரப்பும் முன்­வ­ர­வில்லை. இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா அதற்­கான யோசனையை மாத்­தி­ரமே அமைச்­ச­ர­வையில் முன்­வைத்­துள்ளார். மத்­தள விமான நிலை­யத்­திற்கு முத­லீ­டு­களை தேடி கொண்­டி­ருக்­கின்றோம். எவ­ருக்கும் விற்­ப­தற்கு நாம் முனைய வில்லை. எனினும் மக்­களின் கவ­னத்தை திசை திருப்ப ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தி­யுள்­ளனர். எனவே இந்த ஆர்ப்­பாட்­டத்தின்  பின்­ன­ணியில் அர­சியல் நிகழ்ச்சி நிரலே உள்­ளது. ஆனால் இந்த விவ­கா­ரத்தில் என்னை கோர்த்­துள்­ளனர். 

தற்­போது அம்­பாந்­தோட்டை பிர­ப­ல­மா­ன­வர்கள் என்­னுடன் இணைந்து வரு­கின்­றனர். இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு  எனக்கு எதி­ராக சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. 

எனினும் குறித்த ஆர்ப்­பாட்­டத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் பாராட்­டு­வ­தற்கு பதி­லாக கைது செய்­த­வர்­களை விடு­விக்க வேண்டாம் என நான் கடிதம் மூலம் பொலி­ஸாரிற்கு அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக கூட்டு எதி­ரணியினர் சிலரும் அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­களும் குறிப்­பிட்­டனர்.  இது முற்­றிலும் பொய்­யாகும். எனவே இது தொடர்­பாக சம்­பந்­தபட்ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­ய­வுள்ளேன். நான் எந்­த­வொரு கடி­தத்­திலும் கைச்­சாத்­தி­ட­வில்லை. நான் கடந்த வாரம் இந்­தி­யா­வி­லேயே இருந்தேன். 

எனினும் பொலிஸாரின் கோரிக்கை பிர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் செய­லா­ள­ருக்கு பதி­லாக பாரா­ளு­மன்ற கூட்­ட­மைப்பின் பிர­தானி குமா­ர­சிங்­கவே குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.  எனக்கு இவ்வாறு அரசியல் செய்து பழக்கமில்லை. நான் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட ராஜபக் ஷ குடும்பத்தினருக்காக செய்த சேவைகள் தொடர்பில் நாமல் ராஜபக் ஷ தனது மனச்சாட்சியை  தொட்டு பார்த்தால் தெரியும் என்றார்.