கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல்போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தமிழ் சிறுமி ஆகிய மூவரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்தனர்.

மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள இளம் தாய் மற்றும் இரு சிறுமியர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதான குழந்தையின் தாயான, 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். 

இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை மாலை ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக, வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

இந்தநிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் சிறுமி,வத்சலா பெரேராவின் கணவருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். குறித்த தமிழ் சிறுமியின் பெற்றோர், காணாமல்போன மூவரையும் இனந்தெரியாதோர் அடைத்து வைததுள்ளதாக சந்தேகிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, குறித்த பெண்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  வெல்லம்பிடிய மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த 3 பெண்களில் தமிழ் சிறுமியைத் தவிர ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.