தனக்கு எதி­ராக கறுப்­புக்­கொ­டி­யேந்தி ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்­களை தனது பாது­காப்­பையும் பொருட்­ப­டுத்­தாது வாக­னத்­தி­லி­ருந்து இறங்கிச் சென்று நெகிழ்வுப் போக்­குடன் செயற்­படும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை விட­யத்­திலும் தீர்­வொன்றை வழங்க வேண்டும் என்று பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன்  சபையில் கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை, இலத்­தி­ர­னியல் கொடுக்­கல்­வாங்­கல்கள் (திருத்த) சட்­ட­மூ­லத்தின்  இரண்­டா­வது வாசிப்பு மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டுள்ள அர­சியல் கைதி­களின் நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளன. போர் காலங்­களில் அர­சியல் கைதிகள் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக சிறையில் இருக்­கின்­றனர். தமது வழக்­குகள் துரி­த­மாக்­கப்­பட வேண்டும் என்­பதே அவர்­களின் நீண்­ட­காலக் கோரிக்­கை­யாகும்.  

இதனை வலி­யு­றுத்­தியே அவர்கள் பல முறை போராட்­டங்­களில் இறங்­கி­னார்கள். நாம் அவர்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளுக்கு அமைய அப்­போ­ராட்­டங்கள் கைவி­டப்­பட்­டன. இந்த விவ­காரம் அர­சி­ய­லாக்­கப்­ப­டு­கி­றது. பதின்­நான்கு வரு­டங்­க­ளாக வவு­னி­யாவில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணைகள் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்­களில் அநு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. சாட்­சி­களைப் பாது­காப்­ப­தற்­காக வழக்­குகள் மாற்­றப்­பட்­டி­ருப்­ப­தாக அர­சாங்கத் தரப்பில் கூறப்­ப­டு­கி­றது. அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் யாழ்ப்­பா­ணத்தில் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­ட­போது, ஜனா­தி­பதி தனது பாது­காப்­பையும் பொருட்­ப­டுத்­தாது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நேரில் சென்று கலந்­து­ரை­யா­டி­யமை நல்­ல­தொரு விட­ய­மாகப் பார்க்­கப்­படு­கி­றது. அப்­ப­டி­யான அணு­கு­மு­றையைக் கொண்ட ஜனா­தி­பதி கைதி­களின் விடு­தலை விவ­கா­ரத்தில் அதிக அக்­கறை காண்­பிக்க வேண்டும். 

பல வரு­டங்­க­ளாக சிறையில் உள்­ள­வர்­களின் குடும்­பங்கள் பல பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளன.  புதுக்­கு­டி­யி­ருப்பில் போராட்­டத்தை இரண்­டா­வது முறை­யாக எமது மக்கள் தொடர்ந்­துள்­ளனர். தமது காணியை இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து   மீட்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் தொடர்ந்து வரு­கி­றது. 

இவ்­வி­டயம் பற்றி எதிர்க்­கட்சித் தலைவர் தலை­மை­யி­லான குழு­வினர் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வந்தனர். 19 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டிய சூழ்­நி­லையில் 7 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. மூன்று மாதங்­களில் 11 ஏக்கர் காணி­களும் விடு­விக்­கப்­படும் என உறுதியளிக்கப்பட்டது. இராணுவத்தினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்வதாகத் தெரியவில்லை. அந்த இடத்தைவிட்டுச் செல்வதற்கு மேலதிக பணம் தேவைப்படுவதாகவும், இப்பணத்தை அரசாங்கம் வழங்கினால் அப்பகுதியிலிருந்து வெளியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கின்றோம் என்றார்.