முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு, பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வன பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் பெற்­றுக்­கொ­டுத்த ஆடம்­பர வீடு தொடர்பில் பிணை முறி மோசடி தொடர்­பி­லான  ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில்  சாட்­சி­ய­ம­ளித்த அனிகா விஜே­சூ­ரி­ய­வுக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அவர் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­தாக சட்ட மா அதிபர் திணைக்­களம் நேற்று பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழுவின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தது.

முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் நெருங்­கிய உற­வினர் என அறி­யப்­படும் ஷனில்நெத்தி குமார என்­ப­வ­ரினால் இந்த மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனி­காவின் சகோ­த­ர­ரான விஜித்­துக்கும் இந்த மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் உடன் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறும் சட்ட மா அதிபர் திணைக்­களம் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவை கோரி­யது.

பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜுன் அலோ­சியஸ் 116 இலட்சம் ரூபா செலவு செய்து வாடகை அடிப்­ப­டையில் மொனாக் ரெசிடென்ஸ்  பெந்த் ஹவுஸ் எனும் சொகுசு தொடர்­மாடியில் வீடொன்றைப் பெற்று அதனை முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு வழங்­கி­யமை தொடர்பில் பிர­பல சொத்­துக்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்­பி­லான நிறு­வ­னத்தின் பிர­தா­னி­யாக கட­மை­யாற்றும் அனிகா விஜே­சூ­ரிய ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். இந் நிலை­யி­லேயே அவ­ருக்கு இந்த அச்­சு­றுத்தல் விடுக்­கப்பட்­டுள்­ளது.

இத­னி­டையே மரண அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக நேற்று ஆணைக் குழுவில் வெளி­ப்ப­டுத்­தப்பட்ட அனிகா விஜே­சூ­ரிய பணிப்பாளராகவும் அவரது தந்தை யான நஹில் விஜேசூரிய தலை வராகவும் கடமையாற்றும் ஈஸ்ட் வெஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான 63.9 வீதமான பங்குகள் நேற்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.