அன்பு,கருணையை பரப்பும் தினமாக அமையட்டும் ; பிரதமர்

Published By: Priyatharshan

18 Oct, 2017 | 09:30 AM
image

ஜைன சம­யத்­த­வர் கள் தமது இறுதிப் போத­க­ரான மகா­வீரர் மோட்­ச ­நி­லை­யை அ­டைந்த தின­மா­கவும் தீபா­வ­ளி ­தி­னத்­தையே கரு­து­கின்­றனர். அவ்­வா­று­நோக்­கும்­போ­து­அன்பு, கரு­ணை ­மற்றும் நேசத்தைப் பரப்பும் தின­மா­கவும் இன்­றை­ய ­தி­னத்தைக் கரு­த­மு­டியும் என்று  பிர­தமர்  ரணில் விக்கி­ர­ம­சிங்க விடுத்­துள்ள தீபா­வளி வாழ்த்துச் செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அச் செய்தியில் மேலும்  தெரி­விக்­கப்­பட்­டுள்ள­தா­வது, 

தீமை ­எனும் இரு­ளி­லி­ருந்­து­ மீண்­டு­ ஞானத்தின் ஒளியைப் பிர­கா­சிக்கச் செய்யும் நோக்கில் விளக்­கு­க­ளை ­ஏற்­றி ­தீ­பா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டா­டு­வது இந்­து­மற்றும் சைன­ ச­ம­யத்­தி­னரின் வழக்­க­மாகும். 

தீபா­வ­ளி­தி­னத்தின் உண்­மையான­ அர்த்தம் அசத்­தி­யத்­தை­ ஒ­ழித்­து சத்­தி­யத்­தை­ மே­லோங்­கச்­செய்­வ­தாகும். குரோ­தத்­தை ஒ­ழித்­து­ அன்­பி­னை­மே­லோங்கச் செய்­வ­தாகும். வெறுப்­பி­னை­ ஒ­ழித்து இரக்­கத்­தி­னை­ மே­லோங்கச் செய்­வ­தாகும். சார்ந்­தி­ருத்­த­லை­ ஒ­ழித்­து­ சு­யா­தீ­னத்­தை­ மே­லோங்கச் செய்­வ­தாகும். தீங்­கி­னை ­ஒ­ழித்­து­ நன்­மை­யை­ மே­லோங்கச் செய்­வ­தாகும்.

இந்­து­பக்­தர்­களின் நம்­பிக்­கைக்­கு­ஏற்ப இன்­றை­ய­ தினம் நர­கா­சு­ரனைத் தோற்­க­டித்­த­தி­ன­மாகும். 14 நாட்கள் வன­வா­சத்­தி­லி­ருந்த இராமன் மற்றும் பாண்­டவ இள­வ­ர­சர்­கள்­ மீண்டும் சமூ­கத்­துடன் இணைந்­து­கொண்­ட­தி­ன­மா­கவும் இன்­றை­ய­தி­ன­மே­க­ரு­தப்­ப­டு­கி­றது. இவை அனைத்தும் தீங்­குகள் ஒழிக்­கப்­பட்­டு­நன்­மையின் தோற்­றத்­தி­னை­யே­ அ­டை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றன.

சைன சம­யத்­த­வர்கள் தமது இறுதிப் போத­க­ரான மகா­வீரர் மோட்­ச­நி­லை­யை­ அ­டைந்த தின­மா­கவும் தீபா­வ­ளி­தி­னத்­தையே கரு­து­கின்­றனர். அவ்­வா­று ­நோக்­கும்­போ­து­ அன்பு, கரு­ணை ­மற்றும் நேசத்தைப் பரப்பும் தின­மா­கவும் இன்­றை­ய ­தி­னத்தைக் கரு­த­மு­டியும்.

மானுடம் கோலோட்­சி ­அ­மை­தியும் சமா­தா­னமும் தோற்றம் பெற்­று­ம­னிதன் தன­து­த­னிப்­பட்­ட­ நோக்­கங்­க­ளை­ அ­டைந்­து­கொள்­வ­தற்­கா­க­வன்றி நன்­மை­மீதும் கவனஞ் செலுத்­த­வேண்டும் என்­ப­தே­ தீ­பா­வ­ளி­ பு­கட்டும் பாட­மாகும். பிரி­வ­தற்கு ஆயிரம் காரணங்கள் ஏற்பட்டபோதிலும் கூட, தன்னுடைய உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். 

அந்தப் பிரார்த்தனையுடன், இந்து பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக் கும் மகிழ்ச்சியான, அமைதியான தீபாவ ளிப் பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24