தீபா­வளி தினத்­தன்று இந்து பக்­தர்­க ளால் ஏற்­றப்­படும் தீப ஒளி­யா­னது, அவர்­ க­ளது உள்­ளங்­களில் பிர­கா­சத்­தினை ஏற்­ப­டுத்­து­வதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்­களின் இத­யங்­க­ளிலும்  ஒளி­யேற்றி சகல இனங்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் ஒளிப்­பா­ல­மாக  அது அமைய வேண்­டு­மென்­பதே எனது பிராத்­த­னை­யாகும் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள தீபா­வளி  வாழ்த்துச் செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  

அதில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

உல­கவாழ் இந்­துக்கள் தமது சமய வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­வாக தீமை மற்றும் அறி­யாமை ஆகிய இருளை விட்­ட­கன்று ஞான ஒளி­யேற்றி தமது உள்­ளங்­க­ளையும் இல்­லங்­க­ளையும் கோவில்­க­ளையும் அலங்­க­ரித்து கொண்­டாடும் தீபா­வளித் திரு­நாளை முன்­னிட்டு வாழ்த்துச் செய்­தியை அனுப்பி வைப்­ப­தை­யிட்டு பெரிதும் மகிழ்­வ­டை­கிறேன்.

இவ்­வு­லகில் வாழும் எல்லா மனி­தர்­களும் இரு­ளி­லி­ருந்து விலகி ஒளியை நோக்கி செல்­வ­தற்கு முயல்­கின்­றனர். மனிதன் தனது வாழ்க்கைச் சக்­க­ரத்­தினை ஒளியை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அமைத்துக் கொள்­கிறான். மனி­தனின்  ஆன்­மீக வாழ்க்­கைக்கும் லௌகீக வாழ்க்­கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்­கி­ய­மாக அமை­கின்­றது. 

அந்­த­வ­கையில் தீபா­வளி தினத்­தன்று இந்து பக்­தர்­களால் ஏற்­றப்­படும் தீப ஒளி­யா­னது, அவர்­க­ளது உள்­ளங்­களில் பிர­கா­சத்­தினை ஏற்­ப­டுத்­து­வதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்­களின் இத­யங்­க­ளிலும்  ஒளி­யேற்றி சகல இனங்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும்  ஒளிப்­பா­ல­மாக அது அமைய வேண்­டு­மென்­பதே எனது பிராத்­த­னை­யாகும்.

ஒற்­று­மை­யென்­பது நமது நாட்­டிற்கு மாத்­தி­ர­மன்றி முழு உல­கத்­தி­னதும் இருப்­புக்கு கட்­டாயத் தேவை­யாக அமைந்­துள்ள இன்­றைய பொழுதில் இலங்­கையர் என்ற வகையில் நாமும், இன, மத, சாதி என பிரி­வ­டைந்து காணப்­ப­டு­வ­தற்கு பதி­லாக சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு ஆழ­மான பிணைப்­பு­மிக்க புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட இவ்­வா­றான கலா­சார விழாக்கள் பெரும் ஆதா­ர­மாக அமை­யு­மென்­பதே எனது எண்­ண­மாகும்.

அந்­த­வ­கையில் இலங்­கை­யர்­க­ளி­னாலும் உல­கவாழ் இந்­துக்­க­ளி­னாலும் மிகுந்த பக்­தி­யு­டனும் விழாக்­கோ­லத்­து­டனும் கொண்டாடப்படும்  தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.