மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டது. 

சற்று முன் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு மாணவரும் மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மூடப்பட்டுள்ள கலைப் பீடம் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படலாம் என நம்பப்படுகிறது.