தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் விடுதலை கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்தன சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். எனினும், அது குறித்து எந்த பதிலும் கிடைக்காததையடுத்து மாணவர்கள் உண்ணாவிரத்தில் குதித்தனர்.

இந்நிலையில், நாளை மறுதினம் (19) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்திருப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தை இடைநிறுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின், சம்பிரதாயபூர்வமாக பழரசம் அருந்தி மாணவர்கள் தமது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.