லிட்ரோ கேஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்கவின் உறவினர் ஒருவரை குற்றப் புலனாய்வு பொலிஸார் சற்று முன் கைது செய்தனர். களுபோவிலையில் வைத்து இந்த கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய்வானின் ‘ஃபார் ஈஸ்ட்’ வங்கியின் வலையமைப்புக்குள் புகுந்து பல மில்லியன் ரூபாவை மோசடி செய்தது தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.

மேற்படி வங்கியின் வலையமைப்புக்குள் புகுந்து சுமார் பதினொரு இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கை வங்கியின் சில கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் ஷலீல முனசிங்க கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டவருக்கும் மேற்படி மோசடிக்கும் சம்பந்தம் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.