கண்டியை மற்றுமொரு பாரிய நகரமாக உருவாக்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாநகர அபிவிருத்தித் திட்டங்களை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நீங்கள் வாழக்கூடிய பெருநகரமொன்றை இந்திய சமுத்திரத்தின் மத்தியில் நாம் அமைக்கவிருக்கின்றோம். மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம். அதுவே இந்த மாநகரத் திட்டமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தின் ஊடாக, சர்வதேசத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இலங்கையை ஒரு கேந்திர நிலையமாக அமைத்து, அதனூடான நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். இதன்மூலம், எதிர்வரும் 2030ஆம் ஆண்டில், அதிக வருமானம் கொண்ட நாடாக இலங்கை மாறும்' என்றார்.