தலவத்துர பகுதியின் கம்பளை - வெலிகல்ல வீதியில், எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த இருவர் எதேச்சையாக அந்தப் பொதியைக் கண்டனர். என்னவாக இருக்கும் என அந்தப் பொதியை ஆராய்ந்த அவர்கள், அதனுள் எட்டு கைக்குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தவுலாகலை பொலிஸார் குண்டுப் பொதியை மீட்டு, அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்காக கம்பளை விசேட அதிரடிப் பிரிவு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

யாரேனும் எடுத்துச் செல்லும் வழியில் அவை தவறி விழுந்தனவா அல்லது வேண்டுமேன்றே யாரேனும் அங்கு கொண்டு வந்து வைத்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.