சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் சங்கமித்ரா. இந்த படத்திற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும், கிறாபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்கான நாயகியாக அதாவது சங்கமித்ராவாக நடிக்க பொலிவுட் நடிகை திஷா படானியை தெரிவு செய்தனர். இது குறித்த செய்திகளும் வெளியாயின.

இந்நிலையில் இவர் தன்னுடைய தோற்றம் மற்றும் உடலமைப்பு குறித்து ரசிகர்களுக்கு தெரிவிக்க விரும்பியிருக்கிறார் போலும். அதனால் இப்படியொரு புகைப்படத்தை எடுத்து அதனை தன்னுடைய இணையப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதனை கண்ட ரசிகர்கள் அழகான சங்கமித்ரா கிடைத்திருக்கிறார் என்று விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். 

தகவல் : சென்னை அலுவலகம்