ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராபி விலாஸ் உணவகத்திற்கு முன்பாக கடந்த (13.10.2017) அன்று நண்பகல் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்ன புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஓமந்தை பொலிஸார் (15.10.2017) கைது செய்து நேற்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ் இரு கிராமத்திற்கிடையில் ஜாதியின் காரணமாக தான் சண்டைகள் அதிகரித்து காணப்படுவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.