தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு   நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
றெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பிரான்சிஸ் அல்மேரா மற்றும் றெயின்கோ நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு மத்திய மாகாணங்களுக்கான பிராந்திய விநியோக முகாமையாளர் எம்.சுல்பி,றெயின்கோ நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதான விநியோகஸ்தர் எம்.அஹ்னாப், வடக்கு கிழக்கு விற்பனை முகாமையாளர் ஏ.றிஸ்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.