குறைந்த இன்னிங்சில் அதிக சதமடித்த இந்திய அணியின் விராட் கோலியின் சாதனையை தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா முறியடித்து புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா அபாரமாக துடுப்பெடுத்தாடி சதமடித்தார்இ அவர் அடித்த 26 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி சதம் இதுவாகும். 154 இன்னிங்சில் விளையாடிய அம்லாஇ 26 சதங்களைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர்  26 சதங்களை 166 இன்னிங்ஸில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பெற்றிருந்தார். தற்போது அதை விட குறைந்த போட்டிகளில் 26 சதங்களை எட்டி கோஹ்லியின் சாதனையை ஆம்லா தகர்த்தெறிந்துள்ளார்.