ஆசிய றக்பிதொடரில் தென்கொரிய அணியை வீழ்த்திய இலங்கை றக்பி அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின் 3 ஆம் கட்ட போட்டிகளில் இலங்கை அணி தென்கொரிய அணியை 22-05 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றதன் மூலம் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.

காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை வென்றபோதும் இலங்கை அணி அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியிடம் தோல்வியுற்றதன் காரணமாக இலங்கை அணி 3ஆம் இடத்திற்கான போட்டியில் தென்கொரிய அணியுடன் மோதியது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணியானதுஇ குழு மட்ட போட்டிகளில் தாம் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடியது.

தென் கொரிய அணியின் பலம் மிக்க வீரர்களை தமது வேகத்தின் மூலம் முறியடித்த இலங்கை அணிஇ தென் கொரிய அணிக்கு எதிராக 3 ட்ரைகளை வைத்து தமது திறமையை நிரூபித்தது.

எனினும் தென் கொரிய அணியினால் ஒரு ட்ரை மட்டுமே வைக்க முடிந்த நிலையில்இ இலங்கை அணி தொடரில் 3ஆம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற இத்தொடரில்இ இலங்கை அணி காட்டிய சிறந்த பெறுபேறும் இதுவாகும்.

நடைபெற்று முடிந்த ஆசிய றக்பி போட்டிகளின் 3 கட்டங்களிலும் இலங்கை அணி 3 ஆம் இட போட்டிக்கு தகுதி பெற்றமை இதுவே முதன் முறையாகும்.