திரு­ம­ண­மான இளம் யுவ­தி, இரு மாணவிகளை காணவில்லை : கொலன்­னா­வையில் சம்பவம்

Published By: Robert

17 Oct, 2017 | 09:30 AM
image

கொலன்­னாவை – சால­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த திரு­ம­ண­மான இளம் யுவ­தி­யொ­ரு­வரும் மேலும் இரண்டு பாட­சாலை மாண­வி­களும் காணாமல் போயுள்­ளனர். கடந்த சனிக்கி­ழமை பிற்­ப­கலில் இருந்து இவர்கள் காணாமல் போயுள்­ள­தாக காணாமல் போன மாண­வி­களின் உற­வினர் கள்  முறைப்­பாடு செய்­துள்ளனர். 

கொலன்­னாவை–சால­முல்ல  பிர­தே­சத்தை சேர்ந்த  19 வய­தான முலிதி வத்­சலா பெரேரா என்ற திரு­ம­ண­மான பெண்,   15 வய­தான யசந்தி மது­ஷானி பெரேரா மற்றும் 14 வய­தான சவித்ரி ஆகி­யோரே கடந்த சனிக்­கி­ழமை 14 ஆம் திகதி பிற்­ப­கலில் இருந்து காணாமல் போயுள்­ளனர்.  

தாம் ஆடை கொள்­வ­னவு செய்ய கடைக்­குப்­போ­வ­தாக கூறி வெளியில் சென்ற நிலை­யி­லேயே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தாக காணாமல் போனோரின் உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.  காணாமல் போன மூவரில் 19 வய­தான முலிதி வத்­சலா பெரேரா என்ற  யுவ­திக்கு ஒன்­றரை வயது குழந்­தை­யொன்றும் இருப்­ப­தாக அவரின் பெற்றோர் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் அயல் வீடு­களில் வசிக்கும் இவர்கள் மூவரும்  ஆடை கொள்­வ­னவு செய்ய கடைக்கு செல்­வ­தாக கூறி வீட்டில் இருந்து  சென்­றுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்­வித தக­வல்­களும் இல்லை எனவும் அவர்­களின் தொலை­பே­சிக்கு தொடர்­பு­கொள்ள முயற்­சித்த போதிலும் எவ­ரது தொலை­பேசி அழைப்­பு­களும் தொடர்பில் இல்லை எனவும்   குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 எனினும் நேற்று  காலை யசந்தி மது­ஷானி பெரேரா என்ற மாணவி தனது சகோ­த­ர­னிடம் தொலை­பேசி ஊடாக அழைத்து தான் நல­மாக இருப்­ப­தா­கவும் தன்னை தேட­வேண்டாம் என கூறி­ய­தா­கவும் மீண்டும் இந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைக்க வேண்டாம் என கூறி­யுள்­ள­தா­கவும்   மாண­வியின் சகோ­தரர் பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­வித்­துள்ளார். 

சம்­பவம் தொடர்பில் பெற்­றோரால் வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் பொலிஸார் மாண­விகள் குறித்து துரி­த­மாக விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தா­கவும் மாணவிகளின் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19