இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது சக வீரருடன் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் 38 வயதுடைய கோல் காப்பாளரான ஹுடா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசிய சூப்பர் லீக் போட்டியில் இரு அணிகள் மோதிக்கொண்டன. இப் போட்டியில் ஹுடா முன்னோக்கிச்சென்று பந்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வேகமாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரது அணி வீரரொருவருடன் மோதி, கீழே விழுந்த நிலையில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலமாக அடிபட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நிலைகுலந்த வீரரை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இந்தோனேசிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.