தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19.10.2017 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

குறித்த மாகாணத்தில் உள்ள கல்வி அமைச்சினூடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

19.10.2017 ஆம் திகதி வழங்கப்படவுள்ள இந்த விசேட விடுமுறைக்கு மற்றுமொரு சனிக்கிழமை நாளில் பாடசாலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

18.10.2017 ஆம் திகதி தீபாவளி தினமாகையினால் மறுதினமும் (19.10.2017) மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும்படி தமிழ் பெற்றோரும் ஆசிரியர்களும் விடுத்த வேண்டுகோளையடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வி,விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும்  நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதுடன் இத்தினத்திற்கு பதிலாக இம்மாதம் 28.10.2017 சனிக்கிழமையன்று அனைத்து பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.